Categories
உலக செய்திகள்

ஜபோரிஜியா நகரில் ரஷ்ய படைகளின் தாக்குதல்… பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு… பெரும் சோகம்…!!!!!!

உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைனில் ஜபோரிஜியா நகரில் நேற்று ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 23 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் 28 பேர் காயமடைந்து இருக்கின்றனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  இந்த சூழலில் ஜப்போரீஜியா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. 85க்கும் அதிகமான காயமடைந்திருக்கின்றனர் என கூறியுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை ஜபோரிஜியா பிராந்திய கவர்னர் ஸ்டாரூக் இணையதளம் வாயிலாக வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி மக்கள் சென்ற வாகனங்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யப்படைகள் பொதுமக்கள் வாகனங்கள் மீது ராக்கெட் தாக்குதல்களை தொடுத்திருக்கின்றனர் என அவர் கூறியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரிவதையும் சாலையில் உடல்கள் கிடைப்பதையும் படங்களில் காண முடிகிறது எனினும் இது தொடர்பாக ரஷ்யா தரப்பில் உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Categories

Tech |