Categories
உலக செய்திகள்

ஜப்பானிய தோட்டத்தில் முறிந்து விழுந்த ராட்சத மரம்… 2 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!!!

அர்ஜென்டினாவில்  உள்ள பியூனஸ் அயர்ஸ் ஜப்பானிய தோட்டம் உலகின் மிகப்பெரிய தோட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த தோட்டத்தில் சகுரா, கட்சுரா மற்றும் அசேலியா போன்ற ஜப்பானிய தாவரங்கள் இருக்கிறது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். அந்த வகையில் இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மரங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபோது ஒரு ராட்சத மரத்தில் உள்ள ஒரு பெரும் பகுதியின் கிளை முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் அலறியடுத்து ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |