Categories
உலக செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…!!!

ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்திலும் பயங்கர அதிர்வு ஏற்பட்டது.

ஜப்பானின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற மியாகி நகரில் நேற்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பந்தனை நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மியாகி நகர் மட்டுமல்லாமல் அதனை சுற்றி இருக்கின்ற 17 நகரங்களிலும் ஏற்பட்டது. அந்த நடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடத்திற்குள் தொடர்ந்து மூன்று முறை பயங்கர நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த நேரம் நடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகள் வரை பதிவாகியுள்ளன.

முதலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்திலும் பயங்கர அதிர்வு ஏற்பட்டது. அதனால் பீதியடைந்த மக்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிக்கு சென்றனர். அதன் பிறகு தொடர்ந்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள் செல்ல அச்சம் கொண்டு பல மணி நேரமாக வீதிகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் தங்கள் பொழுதை கழித்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

Categories

Tech |