Categories
உலக செய்திகள்

ஜப்பானில் சுற்றி வந்த ஜாம்பிகள்…..!

அனாவசியமாக வெளியில் நடமாடினால் கொரோனா பிடித்து கொள்ளும் என்று ஜாம்பி வடிவில் பிழிப்புணர்வு :

அனாவசியமாக வீதியில் நடமாடினால் கொரோனா பிடித்துக்கொள்ளும் என்றாலும் அச்சப்படாமல் சுற்றி திரிவோரை பயமுறுத்த ஜப்பானில் வீதி நாடகக் கலைஞர்கள் மனிதர்களை கொல்லும் ஜாம்பிகளாக வேடமிட்டு கார்களை டிரைவினில் வழிமறித்து கொலைவெறி நாடகம் ஆடுகின்றன. டோக்கியோவில் உள்ள ட்ரைவின் உணவகங்களில் கேரேய்க்குள் ஒவ்வொரு காராக நிறுத்தி பேய் கதைகளை அவிழ்த்து விடுகின்றனர். கழுத்தை கடித்து ரத்தம் குடிப்பது போன்ற காட்சிகளை நிகழ்த்திக் காட்டி வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகின்றனர். பார்வையாளர்கள் காருக்குள்  இருக்க நடிகர் வெளியில் இருப்பதால் ஒருவருக்கொருவர் நோய்த்தொற்று பரவாமல் பாதுகாப்பாகவே இந்த திகில் நாடகம் அரங்கேறுகிறது.

Categories

Tech |