ஜப்பானில் 24 சுற்றுலாப் பயணிகளுடன் மாயமான படகை தேடும் பணியில் ஆறு ரோந்து படகுகள் மற்றும் 5 குட்டி விமானங்கள் ஈடுபட்டிருந்தன. இவற்றின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 10 மணி நேரம் கழித்து படகில் பயணம் செய்ததில் ஒருவர் கூட உயிர் தப்பவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. படகு மாயமாவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட அந்த படகில் இருந்து அவசர உதவிக்கு அழைப்பு வந்ததாகவும், மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக படகு மூழ்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதோடு படகுக்குள் தண்ணீர் புகுந்தவுடன் அதில் இருந்த பயணிகள் தப்பிப்பதற்காக ஜன்னல் வழியாக குதிக்க முற்பட்டு இருந்தாலும் அந்த ஜன்னல்கள் பலத்த காற்று காரணமாக இருக்கமாக மூடப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்றபோது உறையவைக்கும் குளிர் நிலவியதால் பயணிகள் எவரும் உயிர் தப்ப வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.