இந்தியா, ஜப்பான்,அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக கலந்துகொள்கிற குவாட் 2-வது உச்சிமாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று துவங்குகிறது. இம்மாநாடு இந்தோ-பசிபிக் பிராந்திய விஷயங்கள், பரஸ்பர ஆர்வமுள்ள உலகளாவிய பிரச்சினைகள் பற்றி தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதற்கு வாய்ப்பினை வழங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோகிஷிடா அழைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா போன்றோருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், ஆஸ்திரேலியாவின் புது பிரதமர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் போன்றோரும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
இதற்கென பிரதமர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு நேற்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். இதையடுத்து அவர் இன்று அதிகாலை தலைநகர் டோக்கியோ சென்று அடைந்தார். அவருக்கு தூதரக அதிகாரிகள் உட்பட பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் பிரதமர் மோடி தங்கவுள்ள நியூஓட்டானி ஓட்டலுக்கு சென்றார். அவரை வரவேற்ப்பதற்காக இன்றுகாலை ஓட்டலுக்கு வெளியே குழந்தைகள் உள்ளிட்டோர் திரண்டு இருந்தனர். அவர்களில் ரித்சுகி கோபயாஷி எனும் சிறுவன் இந்தி மொழியில் பிரதமரிடம் பேசியுள்ளார். அப்போது சிறுவன் ஆட்டோகிராப் வாங்குவதற்காக நான் வந்துள்ளேன் என பிரதமரிடம் கூறியுள்ளான்.
அச்சிறுவன் இந்தியில் தங்கு தடை இன்றி பேசியதில் ஆச்சரியம் அடைந்த பிரதமர் மோடி சிறுவனிடம், இவ்வளவு நன்றாக இந்திபேச எங்கே கற்று கொண்டாய்..? உனக்கு இந்தி நன்றாக தெரியுமா..? என கேட்டார். அடுத்ததாக சிறுவன் வைத்து இருந்த அட்டையை வாங்கி அதில் கையெழுத்து போட்டு கொடுத்து, வாழ்த்திவிட்டு சென்றார். இதுகுறித்து சிறுவன் ரித்சுகி கூறியதாவது “நான் மிக மகிழ்ச்சியாக உள்ளேன். பிரதமர் நான் அந்த காகிதத்தில் எழுதி இருந்த செய்தியை வாசித்து பார்த்தது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. பின் அவரிடமிருந்து கையெழுத்தும் வாங்கி கொண்டேன் என்று சிறுவன் கூறியுள்ளார். பிரதமரின் 2 நாள் வருகையையொட்டி இந்தியவம்சாவளியினர் ஓட்டலின் முன்பு திரண்டு இருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் ஹர் ஹர் மோடி, மோடி மோடி, வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதாகி ஜெய் உள்ளிட்ட கோஷங்களையும் கேட்க முடிந்தது.