Categories
உலக செய்திகள்

ஜப்பான்: தீவிரமடையும் ஒமிக்ரான் தொற்று…. அறிமுகமான புது தடுப்பூசி….!!!!!

உலகம் முழுதும் கொரோனா தொற்று இதுவரை முழுமையாக ஓயவில்லை. இதற்கிடையில் உலகின் பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. அந்த அடிப்படையில் கொரோனா வைரசின் 7வது அலையை எதிர்கொண்டு வரும் ஜப்பானில் ஒமிக்ரான் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

அங்கு தினசரி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்படகூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் இணைந்து இத்தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

Categories

Tech |