பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸ் சில நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தற்போது ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. ஜப்பானில் 5 பேருக்கும், பிரான்சில் ஒருவருக்கும் உருமாறிய கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இரு நாடுகளிலும் கடும் கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து நாடுகளும் மரண பயத்தில் உள்ளன.