Categories
உலக செய்திகள்

ஜப்பான் முன்னாள் அதிபர் மீதான தாக்குதல்…. இணையத்தில் கொண்டாடும் சீனர்கள்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

பிரபல நாட்டின் முன்னாள் அதிபரின் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை சீன மக்கள் கொண்டாடுகின்றனர்.

ஜப்பான் நாட்டின் முன்னாள் அதிபரான ஷின்சோ அபே நீண்ட நாட்களாக அந்நாட்டின் அதிபர் பதவியில் வகித்தார். இந்நிலையில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே பல பகுதிகளில் உள்ள எல்லை தொடர்பான பிரச்சனை உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்த்து ஜப்பான் குவாட் அமைப்பை உருவாக்கியது. இது சீனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டது என்று சீன அரசு குற்றம் சாட்டியது. இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தினால் அது அமெரிக்க-ஜப்பான் கூட்டணி மீதான தாக்குதல் என்று கருதப்படும் என அபே தெரிவித்தார்.

இது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இவரது தேசிய நிலைப்பாட்டு தன்மை மற்றும் ஜப்பான் ராணுவத்தின் புதுமைத் தன்மை ஆகியவற்றை சீனா விரும்பவில்லை. இந்நிலையில் சீன மக்கள் தற்போது ஷின்சா அபே மீதான தாக்குதலை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு சீனா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சீன மக்கள் கொண்டாடுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போதைய ஜப்பான் அதிபர் புமியோ கிஷிடோவுக்கும் அதே நிலைமை வர வேண்டும் எனவும்,  முன்னாள் அதிபர் அபே மீது தாக்குதல் நடத்தியவர்களை ஹீரோ என்றும் பதிவிட்டுள்ளனர். இதற்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |