Categories
உலக செய்திகள்

ஜப்பான் முன்னாள் அதிபர் படுகொலை…. கொண்டாடும் சீன மக்கள்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

பிரபல நாட்டின் முன்னாள் அதிபரின் மரணத்தை சீன மக்கள் கொண்டாடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக ஷின்சோ அபே இருந்தார். இவர் கடந்த 8-ம் தேதி நரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ,ஜப்பான் நாட்டின் கடல்சார் படையின் முன்னாள் உறுப்பினர் தெத்சுயா யமகாமி என்பவர் துப்பாக்கியால் அபேவை சுட்டு கொலை செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் உடனடியாக யமகாமியை பிடித்தனர்.

இந்நிலையில் ‌அபேவின் படுகொலைக்கு சீனா உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சீன மக்கள் அபேவின் படுகொலையை கொண்டாடுவது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீன மக்கள் சமூக வலைதளங்களில் அபேவின் மரணத்தை கொண்டாடுவதோடு, யமகாமி போன்று உடை அணிவது, அவரைப் போன்று நடப்பது போன்ற புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் ஊடகத்தில் வெளியிடுகின்றனர். மேலும் அபே மீது தாக்குதல் நடந்த அன்று யமகாமியை சீன மக்கள் ஹீரோ என்று அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |