ஜப்பான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே(67). இவர் கடந்த 2006-2007, 2012-2020 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இருப்பினும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஷின்ஜோ கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் பேச தொடங்கி சில நிமிடங்களில் அவருக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஒரு நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவர் கழுத்தில் கொண்டு பாய்ந்துள்ளது. அவரை உடனடியாக சிகிச்சைக்காக நார மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் மருத்துவர்கள் எவ்வளவு முயற்சித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இதனையடுத்து ஷின்ஜோஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷிய அதிபர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, தைவான் அதிபர் சாய் இங் வென் என என உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பான் பிரதமரை தொடர்பு கொண்ட அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சந்திப்புகளை பற்றிய, முன்னாள் பிரதமர் அபேவின் திறந்த மற்றும் வெளிப்படை தன்மை வாய்ந்த நீடித்த மரபு சார்ந்த பார்வையின் முக்கியத்துவம் பற்றியும் பயன் குறிப்பிட்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.