ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோஅபே படுகொலைக்கு சீனா இரங்கல் தெரிவித்தது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜான் கூறியதாவது “அபேயின் மறைவால் சீனா அதிர்ச்சியடைந்துள்ளது. சீனா-ஜப்பான் உறவு மேம்பட அவர் பங்களிப்பு செய்துள்ளார்” என கூறினார். எனினும் சீனாவிற்கு எதிராக ஜப்பானின் வலுவான கொள்கையை வடிவமைத்தவர் என ஷின்ஜோ அபேயை சீனர்கள் கருதுகின்றனர்.
இதன் காரணமாக அவரது படுகொலையை சீனர்கள் கொண்டாடும் வகையில் சமூகஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டு அதிரவைத்தனர். இதனிடையில் கொலையாளியை அவர்கள் ஹீரோ என வர்ணித்தனர். மேலும் அபேவுக்கு இறப்புவாழ்த்துகளை தெரிவித்தனர். இது ஷாம்பைன் மதுபாட்டிலுடன் கொண்டாட வேண்டிய ஒன்று என்று சில பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.