Categories
உலக செய்திகள்

ஜப்பான்: முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே இறுதி சடங்கில் மோடி பங்கேற்பு…. வெளியான தகவல்….!!!!

ஜப்பானின் முன்னாள் பிரதமராக ஷின்ஜோஅபே (67) இருந்து வந்தார். கடந்த 2006-07, 2012-20 காலக் கட்டத்தில் அங்கு அவர் பிரதமர் பதவி மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் ஆவார். சென்ற 2020 ஆம் வருடம் அவர் உடல்நல பிரச்சினையை காரணம் காட்டி பதவி விலகினார். எனினும் கட்சி செயல்பாடுகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கான தேர்தல் பிரசார கூட்டத்தில் சென்ற ஜூலை மாதத்தில் அவர் கலந்துகொண்டார். இதற்கென நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நாரா நகர ரயில் நிலையம் முன் கடந்த ஜூலை 8-ம் தேதி காலை 11:30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஷின்ஜோ அபே பங்கேற்று பேசினார். அவ்வாறு பேசத் துவங்கிய சில நிமிடங்களில், அவருக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் 2 முறை சுட்டார்.

இதனால் அவர் கழுத்தில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதன்பின் அவர் உடனடியாக சிகிச்சைக்காக நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் எடுத்து செல்லப்பட்டார். இருந்தாலும் 20 பேரை கொண்ட மருத்துவர்கள் குழு பல மணி நேரம் போராடியும், ஷின்ஜோ அபேயை காப்பாற்ற முடியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 5:03 மணிக்கு அவர் இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆகவே ஜப்பானில் சுட்டுக்கொல்லப்பட்ட 6-வது முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகிறது. இதில் ஷின்ஜோ அபேயை சுட்ட நபர், டெட்சுயா யாமகாமி (41) என்ற கடற்படை வீரர் என தெரியவந்துள்ளது. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவின் மறைவுக்கு உலகதலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

அவரது இறுதிசடங்கு நிகழ்ச்சிகள் தலை நகர் டோக்கியோவிலுள்ள கித்தனோமரு நேசனல் கார்டனில் நிப்பான் புத்தோகன் பகுதியில் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி அரசு மரியாதையுடன் நடத்த ஜப்பானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பார் என கியோடோ நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்பின் ஜப்பானின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து மோடி பேசுவார் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையில் ஆசிய பகுதியில் இந்தியாவின் முக்கிய கூட்டணி நாடாக ஜப்பான் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற 4 நாடுகள் குவாட் என்ற அமைப்பில் ஒன்றிணைந்து, விரிவான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே இருவரும் தங்கள் பதவி காலத்தின் போதும், அபேவின் பதவி காலம் நிறைவடைந்த பிறகும் இருவரும் நட்புனர்வுடன் இருந்தனர்.

Categories

Tech |