Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் முகாம்”… வருகின்ற 1-ம் தேதி முதல்… கலெக்டர் அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் முகாம் நடைபெற இருக்கிறது. வாலாஜாபாத் வட்டத்தில் வருகின்ற 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை மற்றும் 7-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், உத்திரமேரூர் வட்டத்தில் வருகின்ற 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை, 7-ம் தேதி முதல் 10ம் தேதி வரை மற்றும் 14-ஆம் தேதி ஆகிய நாட்கள் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், காஞ்சிபுரம் வட்டத்தில் 1ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை, 7 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ தலைமையிலும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் வருகின்ற 1-ம் தேதி முதல் 3ம் தேதி வரை, 7-ம் தேதி முதல் 8ஆம் தேதி வரை ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்டிஓ தலைமையிலும், குன்றத்தூர் வட்டத்தில் வருகின்ற 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை மற்றும் 7-ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெற இருக்கின்றது.

எனவே சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் முன்பாகவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்துக் கொள்ளலாம். பெறப்பட்ட மனுக்கள் மீது வருவாய் தீர்வாய மனு என குறிப்பிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக முன்கூட்டியே கள ஆய்வு மேற்கொள்ளவும் வருவாய் அலுவலகத்திற்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. எனவே நடைபெற இருக்கின்ற தீர்வாய நிகழ்ச்சியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Categories

Tech |