ஜம்முவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்முவில் கடந்த சில வாரங்களாக டெங்கு பாதிப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2013 ஆம் வருடத்திற்கு பின் மிகப்பெரிய தொற்று பாதிப்பு என மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஷஷி சுதன் ஷர்மா பேசும்போது ஜம்முவில் 3000 மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த தொற்று காரணமாக இதுவரை ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் ஜம்முவில் இதுவரை 3,376 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் தனியார் மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டார் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த வாரத்தில் இருந்து டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது மருத்துவமனைகளின் சேர்க்கும் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. கொசுக்களால் பரவும் பருவ கால வைரஸ் நோய் அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதாகவும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 80 முதல் 90 குழந்தைகள் மற்றும் கிட்டத்தட்ட 50 முதல் 60 பெரியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார்கள் தாமதமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டது இறப்பிற்கு காரணம் இந்த நிலையை சமாளிப்பதற்கு மருத்துவமனை முழுமையாக தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.