Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் துப்பாக்கிசூடு…. பறிபோன 3 உயிர்…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…..!!!!!

ஜம்மு நகரத்திலுள்ள சுஞ்ச்வான் கன்டோன்மென்ட் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அதிகாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அத்துடன் ஒரு பாதுகாப்புப்படை வீரர் வீரமரணம் அடைந்தார். அதுமட்டுமல்லாமல் 4 வீரர்கள் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் ஜம்முவில் பிரதமர் நரேந்திரமோடி நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 2019ல் ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு காஷ்மீருக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அரசியல் பயணத்திற்கு முன்னதாக, நகரத்திலுள்ள ஒரு முக்கிய ராணுவ நிலையத்திற்கு அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரிய பாதுகாப்பு கவலையாக இருக்கிறது. பிரதமரின் வருகையையொட்டி  ஜம்மு-காஷ்மீர் முழுதும் பயங்கரவாதத் தாக்குதல் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கு பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |