Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதல்…… நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்….!!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு  தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று அவர்களது பதுங்குகுழிகளை அழித்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 6 முதல் 9 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கதார் என்னும்  பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பல வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

Categories

Tech |