இன்றைய காலகட்டத்தில் பெண்கள் நாங்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நீரூபிக்கும் விதமாக ஆண்களுக்கு நிகரான அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். அந்த அளவிற்கு பெண்களின் திறமை வலுவடைந்து உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானியாக 24 வயதான மாவ்யா சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய விமானப்படையின் 12வது பெண்மணியான இவர் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் விமானப் படையில் இணைந்து தன்னுடைய சொந்த மாநிலத்திலேயே பணியமர்த்தப்பட்டுள்ளார். இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.