ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபடுகிறது.அவர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. இருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இருக்கின்ற சுந்தேர்பனி செக்டாரில் நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.சிறிய ரக ஆயுதங்கள் மூலம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.