ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்று வருகின்றது. இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்கம் மாவட்டத்திலுள்ள சிம்மர் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சுடுதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.