Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்… மோடி அவசர ஆலோசனை…!!!

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார். அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. காஷ்மீரில் உள்ள நிலைமையும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. காஷ்மீர் தாக்குதலையடுத்து பாரதிய ஜனதா தலைவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது.

Categories

Tech |