ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். இருப்பினும் இந்திய பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக செயல்பட்டு, தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல தீவிரவாதிகளும் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இந்த துப்பாக்கி தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
அந்த வகையில், தெற்கு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில், பீகார் தொழிலாளர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டம் நெஹாம என்ற இடத்தில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். தற்போது தகவலறிந்து பாதுகாப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளன. இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெறும் என எதிர்பாக்கப்படுகிறது .