ஜம்மு-காஷ்மீரில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் சற்றே தணிந்து வரும் நிலையில் பருவகால நோய்கள் தலை தூக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் இந்தியாவின் பல இடங்களில் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் அதிகபட்சமாக ஜம்மு மாவட்டத்தில் மட்டும் சுமார் 659 கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கத்துவா மாவட்டத்தில் 194 பேரும் சம்பா மாவட்டத்தில் 94 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து ஜம்மு-காஷ்மீரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.