ஜம்மு காஷ்மீரில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 40 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். காஷ்மீர் முழுவதும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள குலாப்கர் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக பலத்த மழை கொட்டியது. இதனால் உருவான திடீர் வெள்ளம் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அடித்து சென்றது. கட்டிட இடிபாடுகள் மற்றும் பாறை இடுக்குகளில் இருந்து இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 40 பேரை ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மேலாண் படையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Categories