Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி: இதுவரை 43 பேர் பாதிப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு காஷ்மீரின் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் கூறியதாவது, நோய் தொற்று பாதித்துள்ள 4 பேரில் இருவர் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மேலும் இருவர் ஸ்ரீநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார். 4 பேரும் வெளிநாடு சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்ட நிலையில், கொரோனா நோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,198 ஆக உள்ளது. கேரளாவில் 202 பேருக்கும், மகாராஷ்டிராவில் 215 பேருக்கும் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் நேற்று வரை 39 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Categories

Tech |