Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் ட்ரால் பகுதி என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும்  பயங்கரவாதிகளுக்கும் இடையிலான   துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி  இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார்  இணைந்து ரகசிய தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, திரால் பகுதியில் பதுங்கியிருந்த  பயங்கரவாதிகள்,  திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் பதில்  தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Categories

Tech |