Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஜல்ஜீவன் திட்டத்தில் பயனடைந்தவர்கள்”…. பங்குத் தொகையை செலுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்….!!!!!!

ஜல்ஜீவன் திட்டத்தில் பயனடைந்தவர்கள் பங்குத் தொகையை செலுத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து ஊரக குடியிருப்பவருக்கும் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 2020-21 ஆம் வருடம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இருக்கும் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 31 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றது.

இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாய் இணைப்பிற்கு பொதுமக்கள் பங்குத் தொகையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு கிராமங்களுக்கு ரூபாய் 700, பொது பிரிவு குடியிருப்புகளுக்கு ரூபாய் 1400 செலுத்த வேண்டும். அதற்கான தொகையினை தங்களது ஊராட்சியில் இருக்கும் ஊராட்சி கணக்கில் செலுத்தி ஒப்புதலை பெற்றுக் கொள்ள வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுதோறும் குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகையால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சியில் இருக்கும் பயனாளிகள் தங்களின் பங்குத் தொகையினை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில் முன்கூட்டியே செலுத்தி ஒப்புதலை பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Categories

Tech |