Categories
சினிமா

ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் கதாபாத்திரத்தில் ஷீலா ராஜ்குமார்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

பல்வேறு சர்வேதேச விருதுகளை பெற்ற டூலெட், மண்டேலா, திரௌபதி உள்ளிட்ட திரைப்படங்களில் ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இப்போது இவர் பல்வேறு திரைப்படங்களிலும், வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் தொடர்பான தகவல்களை ஷீலாராஜ்குமார் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியிருப்பதாவது , “வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் பேட்ட காளி என்ற வெப் சீரிஸில் நடிக்கிறேன். அதாவது அண்ணனுக்கு ஜே திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் இந்த வெப்சீரிஸை இயக்குகிறார். மேற்கு தொடர்ச்சிமலை ஆண்டனி இதில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். ஜல்லிக்கட்டை மையமாக கொண்டும் தயாராகும் இந்த வெப்சீரிஸ், வேல்ராஜ் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு இணையாக உருவாகி இருக்கிறது. பேட்டகாளி என்ற ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளேன். கோலிசோடா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு படத் தொகுப்பு செய்த எடிட்டர் ராஜா சேதுபதியின் முதல் தயாரிப்பான ஜோதி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறேன். இவற்றில் கதாநாயகனாக க்ரிஷாகுரூப் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை கிருஷ்ணா அண்ணாமலை இயக்கி இருக்கிறார்.

இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக தற்போதும் தொடர்ந்து கொண்டு இருக்கும் குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதை தவிர தமிழில் இன்னும் 2 திரைப்படங்களில் நடித்து வருகிறேன். அதுபற்றிய தகவல்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. மற்றொரு பக்கம் மலையாளத்தில் முன்பே கும்பலாங்கி நைட்ஸ் என்ற படத்தில் நடித்ததற்காக பல்வேறு பாராட்டுக்கள் கிடைத்தது. இப்போது மீண்டுமாக மலையாளத்தில் பெர்முடா என்ற படத்தில் நடித்து வருகிறேன். ராஜீவ் குமார் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்” என்று ஷீலா ராஜ்குமார் தெரிவித்தார். ஆகவே திரௌபதி நடிகை ஜல்லிக்கட்டுக்கு தயாராகியிருப்பது ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |