தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்த என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 300 மாடுபிடி வீரர்கள், 50% வரை பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தலாம் என்றும் மாடுபிடி வீரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் கொரோனா இல்லை என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. எருதுவிடும் நிகழ்ச்சிகளில் 150 வீரர்கள் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.