திருச்சியில் ஜல்லிக்கட்டு நிறைவுபெற்றுள்ளது.
கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. கருங்குளத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 633 காளைகள் 429 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 22 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். இருந்தும் சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டினை நடத்தி முடித்துள்ளனர்.