Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஜல்லிக்கட்டு போராட்டக் காதல்” திருமணமும் அங்கேயே நடக்க வேண்டும்… காதல் ஜோடியின் கோரிக்கை…!!

காதல் ஜோடி ஒன்று ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடிவாசல் முன்பாக தங்களது திருமணம் நடக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன். இவர் எழுத்தாளராக இருக்கிறார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த பெண்ணான சமூக ஆர்வலர் வித்யாராணி என்ற என்பவரும் கடந்த 2014 அவரிடம் அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இந்த காதல் ஜோடி தங்களுடைய வாழ்வில் ஆடம்பரத்தை முழுவதுமாக துறந்து தற்சார்பு வாழ்க்கை பின்பற்றி வாழ்ந்துவருகிறார்கள்.

இதன் காரணமாக இந்த காதல் ஜோடி எளிமையாக திருமணம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில் இந்த திருமண விழாவிற்கு முன்பாக திருமணம் செய்ய உறுதி ஏற்கும் நிகழ்வு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடிவாசல் முன்பு நடத்த ஆசைப்படுகின்றனர். எனவே கார்த்திகேயன் இது குறித்து ஜல்லிக்கட்டு போராட்ட குழுவிடம் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் திருமண உறுதி ஏற்பு விழாவுக்கு அனுமதி கோரினார்கள். இவர்களின் கோரிக்கை கேட்ட ஜல்லிக்கட்டு குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தான் அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து இந்த ஜோடிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்கள் கோரிக்கையை ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். இருப்பினும் இந்த வருடம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்க உள்ளதால் காதல் ஜோடியின் திருமண உறுதி ஏற்பு கனவு நிறைவேறுமா? என்று கேள்வி எழும்பியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காதல் தோன்றிய அதே இடத்தில் இந்த காதல் ஜோடி திருமணம் செய்ய வாய்ப்பு ஏற்படுமா? என்று எதிர்பார்ப்போடு இந்த காதல் ஜோடி காத்துக்கிடக்கின்றன,

Categories

Tech |