தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட 308 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கு அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட 308 வழக்குகள் ரத்து தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவலர்களை தாக்கியது. தீ வைப்பு போன்ற ஒரு சில வழக்குகளை தவிர பிற வழக்குகளை திரும்ப பெற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.