Categories
தேசிய செய்திகள்

“ஜல் ஜீவன் குடிநீர் திட்டம்”… 60,000 கோடி நிதி ஒதுக்கீடு… மத்திய அரசு தகவல்…!!!

ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்திற்காக 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 9 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நாடு முழுவதும் சுத்தமான குடிநீர் வினியோகத்தில் பலனைப் பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி  2019 ஆம் ஆண்டு  அன்று இத்திட்டம்  அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி இந்தியாவிலுள்ள 19.27 குடும்பங்களில்3.32 கோடி குடும்பங்கள் மட்டுமே குடிநீர் இணைப்புகளை பெற்றுள்ளனர். மேலும் ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான மாபெரும் பணியை நிறைவேற்றுவதற்காக 3.60 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 2022-2023 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் 3.50 கோடி வீடுகளுக்கு  குடிநீர் குழாய் வழங்கும்  வகையில் இத்திட்டத்திற்கு ரூபாய் 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவரையும்  விட்டுவிடாமல் எல்லோருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதே இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |