Categories
தேசிய செய்திகள்

ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீடுக்கு…. மத்திய அரசு ஒப்புதல்….. வெளியான தகவல்…..!!!!!

மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஜவுளித் துறையில் முதலீடு செய்வதற்காக பல நிறுவனங்களிடமிருந்து 67 பரிந்துரை கடிதங்கள் மத்திய அரசுக்கு வந்தது. இவற்றில் கின்னி பிலமென்ட்ஸ், கிம்பர்லி கிலார்க் இந்தியா லிட், அர்விந்த் லிட் உள்ளிட்ட கம்பெனிகளின் 61 பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இவ்வாறு மத்திய அரசு அங்கீகரித்த இந்த 61 பரிந்துரைகளில் விண்ணப்பதாரர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் உத்தேச மொத்த முதலீடு ரூபாய் 19,077 கோடி என்று மத்திய ஜவுளித்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக 2.40 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அடிப்படையில் ரூபாய் 184,917 கோடி முதல் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |