ஜஸ்டின் பிரபாகரன் திருமணத்தில் சமுத்திரக்கனி, விஜய் சேதுபதி, க்ரிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
சென்ற 2014-ம் வருடம் வெளியான பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் பின் ஒரு நாள் கூத்து, டியர் காம்ரேட் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்- கரோலின் சூசன்னா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் மதுரையில் நடைபெற்றுள்ளது.
இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இத்திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, பாடகர் கிருஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட புகைப்படத்தை கிரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களானது தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Wishing u a Happy Happy Married Life @justin_tunes God Bless you Guys.. @VijaySethuOffl @thondankani pic.twitter.com/6kZb0tApLU
— Krishh (@krishoffl) October 6, 2022