Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

‘ஜஸ்டின் லாங்கர்’ நன்றாக பார்த்துக்கொண்டார்…. மீண்டும் கமெண்ட்ரிக்கு திரும்பிய ரிக்கி பாண்டிங்..!!

நெஞ்சுவலியில் இருந்து குணமடைந்து மீண்டும் வர்ணனைக்கு திரும்பியுள்ளார் ரிக்கி பாண்டிங்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. பெர்த் ஸ்டேடியத்தில் நேற்று (டிசம்பர் 2 ஆம் தேதி) வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் வர்ணனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது வர்ணனை செய்துகொண்டிருந்த ரிக்கி பாண்டிங்கிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே ரிக்கி பாண்டிங் குணமடைந்து வர வேண்டும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் நெஞ்சுவலியில் இருந்து குணமடைந்து மீண்டும் வர்ணனைக்கு திரும்பியுள்ளார் ரிக்கி பாண்டிங். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரிக்கி பாண்டிங், “என் சிறுவயது நண்பர் ஜேஎல் (ஜஸ்டின் லாங்கர்) என்னை நன்றாக கவனித்துக் கொண்டார், நான் இன்று காலை பளபளப்பாகவும், புதியதாகவும் இருக்கிறேன். நேற்றைய சிறந்த பகுதியை தவறவிட்ட பிறகு, இன்று டெஸ்ட் கிரிக்கெட்டின் நல்ல நாளுக்குத் தயாராகிவிட்டேன்.” என்று பதிவிட்டுள்ளார்..

 

Categories

Tech |