சேலம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்த நிலையில் பாதுகாப்பு படை வீரர் அவரை காப்பாற்றியுள்ளார்.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து கரூர் செல்லும் பயணிகள் ரயில் நேற்று மாலை முதலாவது நடைமேடையில் இருந்து கிளம்பியது. ரயில் புறப்பட்ட சமயத்தில் ராசிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேகமாக வந்து ரயிலில் ஏற முயற்சி செய்தார். அப்போது அவரின் கால் இடறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியில் சிக்க இருந்தது. இதைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பிரவீன் குமார் விரைந்து அந்த பெண்ணை மீட்டார். மேலும் அந்தப் பெண்ணின் காலை நடைமேடையில் இருந்து இழுத்த நிலையில் அவர் காப்பாற்றப்பட்டார்.
காவலரின் இந்த துரித செயலால் அந்தப் பெண்ணின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை செய்தபோது ராசிபுரத்தை சேர்ந்த காளியம்மாள் என்பதும் அவர் சேலத்தில் இருந்து ராசிபுரத்திற்கு செல்வதற்காக ரயில் நேரம் முயற்சி செய்ததும் தெரிய வந்தது. அதன் பிறகு அந்த பெண்ணிற்கு உரிய அறிவுரை கூறி அந்த ரயிலிலேயே அனுப்பி வைக்கப்பட்டார். சரியான நேரத்தில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு காவலரை பலரும் பாராட்டினர்.