Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஜாக்கிகள் மூலம் 3 அடி உயர்த்தப்பட்ட வீடு” நவீன தொழில்நுட்பத்தை வியப்புடன் பார்த்து சொல்லும் பொதுமக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி தெற்கு தெருவில் சச்சிதானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 850 சதுர அடி பரப்பளவுடைய வீடு 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதால் தரை உயர்ந்து, வீடு பள்ளமாகியதால் கழிவுநீரும், மழை நீரும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அஸ்திவாரத்தை உயர்த்த முடிவு செய்த சச்சிதானந்தம் “ஹவுஸ் லிப்டிங் வித் ஜாக்கி” என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அந்த நிறுவனத்தினர் 6 தொழிலாளர்கள் மூலம் 170 ஜாக்கிகளை பயன்படுத்தி வீட்டை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் கட்டிட தொழில்நுட்ப பொறியாளர் சந்திரசேகர் கூறியதாவது, ஹவுஸ் லிப்டிங் வித் ஜாக்கி என்னும் தொழில் நுட்பத்தை தற்போது பயன்படுத்தி வீடுகளின் அஸ்திவாரத்தை உயர்த்த முடியும். ஒவ்வொரு அடியாக உயர்த்தி இந்த வீட்டை 3 அடி வரை தூக்கி உயர்த்த உள்ளோம். இந்த பணி இன்னும் 3 வாரங்களில் நிறைவு பெறும் எனவும், 7 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |