மதுரை அண்ணா மாளிகையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியதாவது, 80% பணிகளான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை பற்றி விரிவாக விதிக்கப்பட்டுள்ளன. 80 முதல் 90 திட்டங்கள் மற்ற மாநகராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்கு குறைந்த அளவு திட்டங்களே தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேவையான இடவசதி பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்த இல்லை என்பதை பற்றியும் பெரியார் பேருந்து நிலையம், வைகை நதிக்கரை சாலைகள், பூங்கா, நடைபாதை, பாதாள சாக்கடை, போக்குவரத்து நெரிசல் குறைப்பு, பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பது குறித்தும், செய்த தவறை சரி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வடிவேல் காமெடி போல மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் கட்டுவதற்கு பிளானிங் கமிஷன் அனுமதியே வாங்காமல் கட்டப்பட்டதாக கூறப்படும் இரண்டு பேருந்து நிலையங்களையும் காணும் என்று கூறியுள்ளார்.
2,875 கோடி ரூபாய் நிதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் கடந்த 5 வருடமாக ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை எனவும். அப்படியிருக்கையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எவ்வாறு பணம் வந்தது எனவும், முன்னாள் மாநகராட்சி மேயருக்கு, மதுரை வரலாற்றில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைமை செயல் அலுவலர், கமிஷனர், மேயர் ஆகிய மூன்று நபரின் பொறுப்புகளையும் ஒரே நபராக பொறுப்பேற்க எவ்வாறு அதிகாரம் வந்தது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
முதன் முறையாக ஸ்மார்ட் சிட்டி ஆய்வு கூட்டம் ஜனவரி 2021ல் தான் நடைபெற்றது. ஏன் அதற்கு முன் நடைபெறவில்லை எனவும், அதை முடிவெடுத்தவர்கள் யார்? எனவும் வினவினார். பழைய திட்டப்படி பெரியார் பேருந்து நிலையத்தை திறந்தால் வாகன நெரிசல் அதிகமாகும். அதனால் காவல்துறை, ரயில்வே அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து திட்டமிடுவதாக அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஏதேனும் முறைகேடான செயல் இருந்தால் நிரூபிக்கவும் என கூறியதற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது, கொஞ்சமேனும் அறிவு இருப்பவர்கள் இவ்வாறு சவால் விட மாட்டார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முறைக்கேட்ட கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமான விஷயமில்லை. மேலும் முன்னாள் அமைச்சர்கள் வீட்டிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
அதனால் அமைச்சர் செல்லூர் ராஜூ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவரது விஞ்ஞான அறிவு உலகம் அறிந்த ஒன்று பணத்தை இழந்தால் கூட சம்பாதித்து விடலாம் ஆனால் தவறான ஒரு திட்டத்தால் 10 மடங்கு நஷ்டம் ஏற்படும் என்று பதிலளித்துள்ளார். மேலும் ஜிஎஸ்டி கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, 10 ஆம் தேதிக்கு மேல் தான் அந்த கூட்டத்திற்கு அழைப்பு வந்தது. அதில் எந்தவித முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் எதுவுமில்லை.
அதில் கலந்துகொள்ள அழைப்பு முன்னதாகவே வரவில்லை. மேலும் பல்வேறு நிகழ்வுகள் தொகுதியில் நடைபெற்றதால் அதில் கலந்துகொள்ளும் திட்டம் இருந்தது. முதல்வரின் அனுமதி பெற்ற பின்னரே கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. நிதித்துறை அமைச்சர் அதில் பங்கேற்றார். அங்கு எனது கோரிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.