Categories
ஆன்மிகம் இந்து

ஜாதகத்தில் குரு பலன் இருந்தால் என்ன நடக்கும்…? ஆன்மீகம் தரும் தகவல்…!!!

ஜாதகத்தில் நவ கிரகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் நவக்கிரகங்களின் பெயர்ச்சியே ஒருவருடைய வாழ்வில் நன்மை, தீமை ஏற்படுவதற்கு முழு காரணம். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் தான் ஒருவருக்கு ராகு, கேது, சனி மற்றும் குரு பெயர்ச்சி போன்றவற்றை ஜோதிடத்தில் தீர்மானிக்கிறார்கள். அவற்றில் குரு பலன் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

ஒருவருடைய வாழ்க்கையில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய ஜாதகத்தில் உள்ள குரு பலனால் தான். குருபகவான் என்பது நவக்கிரகங்களில் முதன்மையான சுபகிரகம். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் பலமாய் இருந்தால் அவருடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், சுபிக்ஷமாகவும் இருக்கும். ஏனென்றால் குரு அனைத்து வகையான திறன்களையும் பெற்றவன்.

மேலும் ஒருவருடைய ஒழுக்கம், வீரம், ஆண்மை, மற்றவருக்கு உதவி செய்தல், பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுதல், செல்வாக்கு, பாராட்டுகள், விருதுகள், அறிவு, தெய்வ வழிபாடு என அனைத்திற்கும் மூலக்காரணமாக இருப்பவன் குரு.

மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் குரு பலன் இருந்தால் தான் அவருக்கு திருமணம் நடக்கும். குரு பகவான் பலவீனமாக இருந்தால் ஒருவர் ஞாபக மறதி, வறுமை, நோய் போன்றவற்றால் மிகவும் அவதிப் படுவார். ஒருவருக்கு குரு பலம் குறைவாக இருந்தால், அதற்கு சிறந்த பரிகாரம் அவர் சிவனை வழிபட்டு, நான்கு பேருக்கு அன்னதானம் செய்வதினால் அவருக்கு நல்லது நடக்கும்.

Categories

Tech |