Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜாதியை சொல்லி…. மதத்தை சொல்லி…. ஆபாசமாக திட்டுவாங்க… அதிரடி உத்தரவை வெளியிட்ட ஸ்டாலின் …!!

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள், பொறுப்பாளர்கள் என அனைவரிடமும் அவ்வப்போது ஆலோசனை நடத்தி முறையான வழிகாட்டல் செய்து வருவார். ஆட்சிப்பொறுப்பில் திமுக இருந்தாலும் கூட,  மக்களோடு மக்களாக பயணிக்கும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், எப்படி செயல்பட வேண்டும் ? உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி வருவார்.

இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின், தனது ஐடி விங் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் செய்தார். அப்போது ஜாதியை சொல்லி திட்டுவார்கள், மதத்தை வைத்து திட்டுவார்கள், பெண்களாக இருந்தால் ஆபாசமாக திட்டுவார்கள், அதுதான் அவர்களின் பண்பாடு.”வாழ்க வசவாளர்கள்” என்ற அடிப்படையில் தான் நாம் செயல்பட வேண்டும். இதுதான் நமது பண்பாடு. மலை அளவுக்கு பொய்களையும்,  வீணர்களின் வசவுகளையும் உண்மை எனும் ஒற்றை ஆயுதத்தால் முறியடியுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார்.

Categories

Tech |