Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜாதி உணர்வு இருக்கு…! ஆனால் – அதிரடியாக பேசிய கருணாஸ் MLA ..!!

எனக்கு ஜாதி உணர்வு உண்டு, ஆனால் ஜாதி வெறி இல்லை என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், என்னை பொறுத்தவரை இந்த பதவி என்பது நான் ஒன்னும் படிச்சு வாங்கின பட்டம் கிடையாது. அதே மாதிரி அரசியல் என்பது எனக்கு தொழிலும் கிடையாது. உலகம் அறிய எல்லோருக்கும் தெரியும் நான் ஒரு சாதாரண பாடகனாக இருந்து… ஒரு நடிகனாக வளர்ந்துதான்  உருவானவன்.

நான் சாதி உணர்வு உள்ளவனே தவிர…  வெறி பிடித்தவன் அல்ல. சுய சாதி பற்றும், பிற சாதி நட்போடு வாழ வேண்டும் என்று தான் என்னுடைய முக்குலத்தோர் இளைஞர்களை நான் வழிநடத்திக் கொண்டு இருக்கிறேன்.தவறான பாதைகளில் அவர்களை செல்லவிடாமல் படித்தவர்களாக மாற்றிக்கொண்டு இருக்கின்றேன்.

இட ஒதுக்கீட்டை கேட்டு இத்தனை ஆண்டுகால போராடிய முக்குலத்தோர் சமுதாயத்தினுடைய அமைப்பை நீங்கள் அடையாளம் காட்ட முடியாது. அந்த வகையிலே இவர்களை நல்வழி படுத்துவதற்காகத்தான் நான் முயற்சி செய்கிறேன்.யாரோ ஒருவரால் நான் முக்குலத்தோர் சமுதாயத்தினுடைய பிரதிநிதியாக அடையாளம் காட்டப்பட்டவர் அல்ல.

இட ஒதுக்கீடு ஒரு சமுதாயத்திற்கு கொடுத்ததை ஏன் கொடுத்தீங்க ? என அதுல எனக்கு கோவம், வருத்தம் அதெல்லாம் கிடையாது. ஒவ்வொரு சமுதாய மக்களும் அவர்களுடைய கோரிக்கைகளை கேட்பதற்கும்… வென்றெடுப்பதற்கு ஜனநாயக நாட்டிலே உரிமை இருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் 68 சீர்மரபினருக்கான ஜாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்துவதற்கு 2020 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஜாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தி முடிக்க  வேண்டும்,  அதற்கான செலவை மத்திய அரசை ஏற்றுக் கொள்ளும் என்ற சுற்றறிக்கை வந்தாயிற்று. ஆனால் மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது ? இதுவரை ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கிறதா ? இல்லை.

ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் என்னசெய்ய வேண்டும் ? ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கக்கூடிய 358 ஜாதி  மக்களுடைய ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அந்த கணக்கெடுப்பின் அடிப்படையிலே தானே அவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். 108 சமுதாய மக்களை உள்ளடக்கிய வன்னியர் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களாக இருந்தவர்கள்….

டாக்டர் கலைஞர் அவருடைய ஆட்சி காலகட்டத்திலே….  அவருடைய ஆட்சி காலத்திலே தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களாக…. 108 சமுதாய மக்களை உள்ளடக்கி ஒரு அரசாணை அன்றைக்கு வெளியிட்டு,  நடைமுறைப்படுத்தப்பட்டு  கடந்த முப்பது ஆண்டுகளாக அந்த மக்கள் இன்றைக்கு அரசு வேலைகளிலேயே… மத்திய – மாநில அரசு வேலைகளில் மிகப் பெரும்பான்மையாக இருந்துகொண்டிருக்கிறார்கள் என கருணாஸ் தெரிவித்தார்.

Categories

Tech |