உத்திரபிரதேச மாநிலத்தில் 8-ம் வகுப்பு பயிலும் தலித் மாணவி பள்ளியில் இருந்து அடித்து விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிக்பூர் கிராமத்தில் பள்ளிக்குச் சென்ற முன்னாள் ஊர் தலைவர் மனோஜ் குமார், அப்போது அங்கிருந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சீருடை அணியாமல், சாதாரண உடை அணிந்திருந்தை கண்டு, ஏன் சீருடை அணியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அந்த சிறுமி, தன் தந்தை சீருடை வாங்கி தரவில்லை எனவும், வாங்கி கொடுத்தவுடன் அணிந்து வருவதாக கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அவர் மாணவியை ஜாதியை சொல்லி திட்டி அடித்து பள்ளியிலிருந்து வெளியே தள்ளி விட்டுள்ளார். இதனை அறிந்த, அந்த சிறுமியின் உறவினர்கள் காவல்நிலைத்தில் புகார் அளித்ததை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜாதியை சொல்லி மாணவியை பள்ளியில் இருந்து விரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.