Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஜாதி சான்றிதழ் வேண்டும்…. இல்லையெனில் தேர்தலைப் புறக்கணிப்போம்… மலைவாழ் மக்கள் போராட்டம்..!!

பர்கூர், காளி மலை மலை வாழ் மக்கள் தங்களுக்கு ஜாதி சான்றிதழ் தர வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்துகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பகுதிக்கு அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியை சேர்ந்த ஈரட்டி, மின் தாங்கி, எப்ப தான் பாளையம், கல் வாழை, கோவில் நத்தம் மற்றும் எண்ணமங்கலம், மலையனூர், குரும்பபாளையம், மேடு நல்ல கவுண்டன் கொட்டாய், காளிமலைஆகிய பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மலையாளி பழங்குடியின மக்கள் தங்கள் குடும்பங்களுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இவர்களும் இவர்களின் குழந்தைகளும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்கள் பகுதியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை புறக்கணிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது பற்றி கிராம மக்கள் கூறுகையில்:-

இந்நாள்வரை நாங்கள் எந்த இன ஜாதி  பட்டியலை சேர்ந்தவர்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தலைமுறையாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் இல்லாமலும், எந்த ஒரு பொருளாதார ஏற்றமும் இல்லாமலும் வாழ்ந்து வருகிறோம்.

கோவை அரசு பதிவேட்டின் படி 1887ஆம் ஆண்டு பவானி தாலுகாவை சேர்ந்த பர்கூர் மலை மற்றும் காளி மலை போன்ற மலைப்பகுதிகளில் மலையாளி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சேர்வராயன் மலை மற்றும் கொல்லிமலை பகுதியை சேர்ந்த மலையாள இன மக்கள் என்று கூறப்படுகின்றது.

மேலும் சேலம் மாவட்ட அரசு பதிவேட்டின் படி 1918ஆம் ஆண்டு பவானி தாலுகாவில் உள்ள பர்கூர் மலை பாலமலை மற்றும் காளி மலைப் பகுதிகளில் கொல்லிமலையில் சேர்ந்து மலையாள இனமக்களும் வசித்து வருகிறார்கள் என்று தெளிவாக கூறப்படுகிறது. இதில் குறிப்பிட்ட பாலமலை மலைப்பகுதியில் உள்ள மலையாள மக்களுக்கு மட்டும் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கூர்மை மற்றும் காலி மலை பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இதுவரை ஜாதி சான்றிதழ் கிடைக்கப்பெறவில்லை.

மலையாளி இன மக்கள் வசிக்கும் மாவட்டங்களானசேலம், திருச்சி, நாமக்கல், பெரம் பலூர், விழுப்புரம், வேலூர், தர்மபுரி, திருவண்ணா மலை  ஆகிய இடங்களில் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஈரோடு மாவட்ட பர்கூர் மலைப்பகுதியில் மலைவாழ் மக்களுக்கும் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் ,வீடுகள் முன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறினர். இதனால் கிராம நிர்வாக அலுவலரிடம் எங்களது வாக்காளர் அடையாள அட்டை ,ரேஷன் கார்டுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க உள்ளதாக அவர்கள் கூறினர்.

Categories

Tech |