Categories
உலக செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி…. தடை விதித்த பிரபல நாடு…. ஏன் தெரியுமா….?

கனடாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே மற்ற நிறுவனங்களின் தடுப்பூசிகளை ஒருவருக்கு முழுமையாக செலுத்த இரண்டு டோஸ்கள் கால இடைவெளி விட்டு செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க தயாரிப்பான ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஒருவருக்கு ஒரு டோஸ் செலுத்தினால் மட்டும் போதுமானதால் மற்ற தடுப்பூசிகளை விட உலக நாடுகளில் வரவேற்பு அதிகமாக இருந்தது.

இந்நிலையில்  தற்போது கனடா  ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை தடை செய்துள்ளது. இதுகுறித்து கனடாவெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த வாரம் 300000 தடுப்பூசிகளை இறக்குமதி செய்து மக்களுக்கு செலுத்த திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த தடுப்பூசிகள் அதிக ரத்தக் கட்டிகளை உருவாக்கி வருவதால் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்ட பிறகே தடுப்பூசி செலுத்தப்படும் எனதெரிவித்துள்ளது

மேலும் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரத்தில் இயங்கும் Emergent BioSolutions நிறுவனத்தில் தவறான மூலப்பொருட்கள் பயன்படுத்தி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியில் பிரச்சனை வந்ததால் அதேபோல் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளும் இருக்கும் என எண்ணி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து தடுப்பூசிகளை போல ஜான்சன் ஜான்சன் தடுப்பூசிகளும் பாதுகாப்பானது என உறுதி கிடைத்தவுடன் இந்த தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |