ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிக பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் நான்காவது தடுப்பூசி ஆகும். தற்போது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் ஜான்சன் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஆய்வக பரிசோதனை தேவை இல்லை என்றும் மத்திய மருத்துவ தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.