அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பெண்களின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகி உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் Oregonஐ சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சில தினங்களில் அந்த பெண்ணின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகியுள்ளது. இந்நிலையில் உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து ஏற்கனவே ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்களுக்கும் அவரகள் உடலில் ரத்த கட்டிகள் உருவாகி உயிரிழந்துள்ளனர். மேலும் அவர்களில் 6 பெண்கள் 18 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள். இந்நிலையில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 நபர்களுக்கு மூளை மற்றும் உடம்பில் ரத்த கட்டிகள் உருவாகி உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.