பெரும்பாலான பச்சிளம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனத்தின் உற்பத்தி உரிமையை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
மேலும் பவுடர் மாதிரிகளை பரிசோதித்து பார்த்தபோது பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த ஜான்சன் பேபி பவுடரை பயன்படுத்தினால் சரும பாதிப்பு மற்றும் உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனால் இதன் உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் அம் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.