Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜான் பாண்டியன் போட்டியிடும்…. தொகுதி இது தான்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கிடுவதில் இழுபறியும், கூட்டணி குறித்த குழப்பமும் நீட்டித்து வருகின்றது.

இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எழும்பூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார்.

Categories

Tech |