ஜாமினில் இருந்து வெளி வந்தவரை மூன்று பேர் கொலை செய்ததையடுத்து மதுரை கோர்ட்டில் சரணடைந்தள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் நான்கு கொலை வழக்கு உட்பட பல குற்றவழக்குகள் இருக்கின்ற நிலையில் இவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து மத்திய சிறையில் இருந்து நேற்று முன்தினம் அவரின் உறவினரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது மேலகால் அருகே மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த கார் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலை தடுமாறி விழுந்த அவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த பின் அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் நேற்று கொலை தொடர்பாக ரமேஷ் பாபு, சுகுமார், அலெக்ஸ் குமார் உள்ளிட்ட மூன்று பேரும் மதுரை கோர்ட்டில் சரணடைந்தார்கள். அப்பொழுது அவர்கள் கூறியதாவது, 2020 ஆம் வருடம் ரமேஷ் பாபுவின் உறவினரான திருமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை சக்திவேல் கொலை செய்ததற்காக அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக சக்திவேலை கொலை செய்ததாக மூன்று பேரும் கூறியுள்ளனர்.